Monday, May 27, 2019

Vithi Nathiye Song Lyrics from Thadam

ஆறாய் மனம் ஆறாய் மனம்
முடிவிலி ஆறாகவே பாயும் 
உந்தன் அலைகளின் மேலே
ஓர் எதிர் ஒளி போலே நான்

ஆறாய் மனம் ஆறாய் மனம்
விரைந்திடும் ஆறாகவே நீளும் 
அதன் கரைகளின் மேலே
கால் தடங்களை போலே நீ

இதழ் மேலே அணியும் புன்னகையும்
விழியுள்ளே புதையும் கண்ணீரும்
மனமெல்லாம் கனக்கும் நினைவுகளோடு
முன்னே செல்கின்றேன்

நீ ஒரு தினம் 
காதல் பாய்கிறாய்
ஏன் மறுதினம்
காய்ந்து போகிறாய்
நீ என்னை எங்கே
கொண்டு செல்கிறாய்
என் விதி நதியே

நீ ஒரு கணம்
பாடல் ஆகிறாய்
ஏன் மறுகணம்
தேய்ந்து போகிறாய்

நீ என்னை எங்கே
கொண்டு செல்கிறாய்
என் விதி நதியே
என் விதி நதியே


எனக்காய் சில பூக்கள்
பிறக்காதா திறக்காதா
எனக்காய் சில தூறல்
மலர்வாயா வின் கிளையே

சில ஆசைகளை நிறைவேற்றித்தான்
பல ஆசைகளை நுரைபோல் ஆக்கினாய்
ஒரு நாள் வீழா மறு நாள் மீள
என் நெஞ்சுக்குள் சொல்லித்தந்தாய்

நீ ஒரு தினம்
காதல் பாய்கிறாய்
ஏன் மறுதினம்
காய்ந்து போகிறாய்

நீ என்னை எங்கே
கொண்டு செல்கிறாய்
என் விதி நதியே

நீ ஒரு கணம்
பாடல் ஆகிறாய்
ஏன் மறுகணம்
தேய்ந்து போகிறாய்

நீ என்னை எங்கே
கொண்டு செல்கிறாய்
என் விதி நதியே
என் விதி நதியே
என் விதி நதியே

No comments:

Post a Comment