Monday, May 27, 2019

Inaiye En Uyir Thunaiye Song Lyrics from Thadam Movie

இணையே என் உயிர் துணையே 
உன் இமை திறந்தால் நான் உறைவது ஏனடி 
அழகே என் முழு உலகம் உன் விழிகளிலே 
கண் உறங்குது பாரடி

அருகே நீ இருந்தால்
என் கைப்பேசி வாய் மூடுமே
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்
என் தண்ணீரில் தேன் கூடுமே

இணையே என் உயிர் துணையே 
உன் இனிமையிலே நான் கரைவது ஏனடா 
யுகமாய் கை விரல் பிடித்து நாம் நடப்பது போல் 
நான் உணர்வது ஏனடா இணையே

மையல் காதலாய் மாறிய 
புள்ளி என்றோ மனம் கேட்குதே 
காதல் காமமாய் உருகொண்ட தருணம்
நினைக்கையில் உயிர் வேர்க்குதே

உடல் மேல் பூக்கும் நீரோடு நீராட்டியே
சில நாள் என்னை சுத்தம் செய்தாய்
எந்தன் சேவைகள் எல்லாமே பாராட்டியே
எந்தன் ஆடைகள் மீண்டும் தந்தாய்


இணையே என் உயிர் துணையே 
உன் இனிமையிலே நான் கரைவது ஏனடி

யுகமாய் கை விரல் பிடித்து 
நாம் நடப்பது போல் 
நான் உணர்வது ஏனடா

அருகே நீ இருந்தால்
என் கைப்பேசி வாய் மூடுமே
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்
என் தண்ணீரில் தேன் கூடுமே

இணையே என் உயிர் துணையே 
உன் இனிமையிலே நான் கரைவது ஏனடி 
யுகமாய் உன் விரல் பிடித்து நாம் நடப்பது போல்
நான் உணர்வது ஏனடி

இணையே

No comments:

Post a Comment